Friday, November 21, 2014

புதிர்


 நம்ம சுப்புரமணி ஒரு மளிகை கடைக்கு வேலைக்கு போனான். சுப்புரமணி சேட்டைக்காரன்.ஒரு தடவ 40 கிலோ படிக்கல் ( 40 கிலோ படிக்கல் என்பதே கிடையாதே என்று சொல்பவர்களுக்கு சும்மா ஒரு கணக்கிற்கு ) ஒன்ன கீழ போட்டு ஒடச்சுட்டான் . அது நாலு துண்டா உடைந்து விட்டது. நாலும்
வேற வேற எடை. கடைகாரருக்கு பயங்கர கோபம் அவன திட்டிகிட்டே இருந்தார்.
' சும்மா திட்டாதீங்க முதலாளி, நான் உங்களுக்கு நல்லது தான் செஞ்சு இருக்கேன். நியாயமா பார்த்த நீங்க என்னை பாராட்டனும்'..
கடைகாரர் அவன முறைத்து பார்த்தார்.
'என்ன முதலாளி அப்படி பார்கீறீங்க. இங்கே பாருங்க, முதலில் 40 கிலோ படிக்கல்ல வச்சுகிட்டு 40 கிலோ மட்டும் தான் எடை போட முடியும். இப்போ நாலு துண்டா உடைந்ததால  1 கிலோ முதல் 40 கிலோ வர எந்த எடையையும் நீங்க போட முடியும்.
உடனே முதலாளி 12 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.
28 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.
37 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.
4 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.
முதாளிக்கு ஆச்சர்யம் ஆச்சர்யம்.
நம்ம சுப்புரமணி புத்தி கூர்மை பார்த்து அவனுக்கு சம்பளம் அதிகமாக்கினார்.

சரி இப்போ விசயத்திற்கு வருவோம்.

சுப்புரமணி எப்படி இத பண்ணினான் . அந்த படிக்கல் எந்தெந்த எடையில் உடைந்திருக்கும். மொத்தம் நான்கு துண்டுகள் . ஒன்றின் விடையை நான் சொல்லி விடுகுறேன். அத்து 1 கிலோ. மற்ற மூன்றின் எ(வி)டையை நீங்க சொல்லுங்களேன்.

No comments:

Post a Comment