Thursday, September 19, 2013

Photo: Unlimited Gk visit www.ias.org.in

use your mind

Do it quick.

குழந்தைகளுக்கு கணக்கு போட வரலையா??!




சில குழந்தைகள் கணிதப் பாடம் என்றாலே பயந்தோடுவார்கள். மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் எடுக்கும் குழந்தைகள், கணிதத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண்களை எடுப்பர். குழந்தைகள் புரிந்துக் கொள்ளும் வகையில், ஆசிரியர் நடத்தாததே இதற்கு முக்கிய காரணமாகும்.

குழந்தைகள் மனதில் பதியும்படி கணிதத்தை வரைப்படம் மூலமாகவோ, விளையாட்டுகளின் மூலமாகவோ சுலபமாக கற்பிக்கலாம். குழந்தைகளின் கணிதத் திறன் அதிகரிக்கும் வகையில் பிரத்யேகமாக ஒரு இணையதளம் உள்ளது.
குழந்தைகள் பள்ளி விடுமுறை நாட்களில் வீணாக நேரத்தை கழிப்பதைவிட, அறிவு திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாக சிற்சில கணித விளையாட்டுகளின் மூலமாக பயணுள்ளதாக மாற்றலாம்.

கணிதத்தில் உள்ள எண்கள், எண்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், பின்னம், இயற்கணிதம், வடிவக்கணிதம், மணி பார்த்தல், பணம் மாற்றம் போன்ற எளிய கணக்குகளைக் குழந்தைகளுக்கு எளிமையாக கற்பிக்கும் வகையில் கணித பாடங்கள் விளையாட்டு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த கணக்குகள் அனைத்தும் குழந்தைகள் ஒளி மற்றும் ஒலி வடிவத்தில், கண்டும் கேட்டும் தெரிந்து கொள்ளும் படியாகவும், அதைப் படிப்படியாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இணையத்தளத்தில் கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட பல விளையாட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த விளையாட்டுக்கள் பல குழந்தைகளின் கணித ஆர்வத்தை துண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இணையதளம்: www.kidsnumbers.com